கொரோனாவிற்கு சாதி, மதம், மொழி, நிறம் ஏதும் தெரியாது -பிரதமர் மோடி
கொரோனாவிற்கு சாதி, மதம், மொழி, நிறம் ஏதும் தெரியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலமாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் அதற்கு சாதி, மதம், மொழி, நிறம் ஏதும் தெரியாது. கொரோனாவை தடுக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
COVID-19 does not see race, religion, colour, caste, creed, language or borders before striking.
Our response and conduct thereafter should attach primacy to unity and brotherhood.
We are in this together: PM @narendramodi— PMO India (@PMOIndia) April 19, 2020