கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா.. ஒரே நாளில் 91 பேர் பாதிப்பு!
கேரளாவில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால்,அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது.
கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஓரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,005 ஆக அதிகரித்துள்ளது.
அதில் 73 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும், 15 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேர் என மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனா தோற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
June 8 #COVID19 Update
91 new cases today. (88 of these are import cases)
11 recoveries.
1 death???? 1,97,078 are under observation
???? 85,676 samples collected; 82,362 results are -ve.
???? 22,357 covered in sentinel surveillance; 21,110 samples -ve. pic.twitter.com/sus4LYMg1H— CMO Kerala (@CMOKerala) June 8, 2020
அதுமட்டுமின்றி, இன்று ஒரே நாளில் 11 பேர் வீடுதிரும்பிய நிலையில், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,174 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.