கோவிஷீல்டு உற்பத்தித்திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்..!
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை பாதித்து வருகிறது. இதன் காரணத்தால் இதிலிருந்து காத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் இந்தியா கோவிஷீல்டு, கோவேக்சீன் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது.
தற்போது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தித்திறனை 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக மத்திய அரசு, மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளதாவது,
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியாளர்கள் தெரிவித்த தகவல் படி, மாதாந்திர உற்பத்தி திறனை 110 மில்லியன் டோஸிலிருந்து 120 மில்லியன் டோஸாக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், கோவேக்ஸீன் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியும் 25 மில்லியன் டோஸிலிருந்து 58 மில்லியன் டோஸாக அதிகரிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.