எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை… கோவாக்சின் நிறுவனம் விளக்கம்.!

Covaxin - Bharat Biotech

Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள் உலகை ஆட்டி படைத்த கொரோனாவை கட்டுப்படுத்த உலகில் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டறிந்தனர். இதில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிரிட்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனில் உள்ள அஸ்ட்ராஸெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவிஷீல்டு. அதனை சீரம் இன்ஸ்டிடியூட்  எனும் இந்திய நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்தது. அதே போல இந்தியாவில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் எனும் இந்திய நிறுவனம் தயாரித்து வெளியிட்ட தடுப்பூசி கோவாக்சின்.

கடந்த சில தினங்ளுக்கு முன்னர், கோவிஷீல்டுக்கு எதிராக பிரிட்டனை சேர்ந்த ஜேமி ஸ்காட் என்பவர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியன் பக்கவிளைவு காரணமாக தனது குழந்தைகளுக்கு மூளையில் ரத்த உறைதல் ஏற்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். அப்போது, தடுப்பூசியால் மிக அரிதாக சிலருக்கு ரத்த உறைதல், ரத்த தட்டணுக்கள் குறைபாடு ஏற்படுவது உண்மைதான். ஆனால் மூளையில் ரத்த கசிவுக்கு எங்கள் தடுப்பூசி காரணமில்லை என விளக்கம் அளித்தது கோவிஷீல்டு நிறுவனம்.

பிரிட்டனில், கோவிஷீல்டு அளித்த இந்த தகவல், இந்தியாயாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தும், இது அரிதினும் அரிதாக யாருக்கேனும் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டு வந்தாலும், அதே போல இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மீதான சந்தேகமும் எழுந்தது.

இதனை அறிந்த கோவாக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி,  கோவிட்-19 நோய்த்தடுப்பு தயாரிப்பு திட்டத்தில், எங்கள் நிறுவனம் பல்வேறு செயல்திறன் சோதனைகளை நடத்திய பிறகே கோவாக்சின் தடுப்பூசி வெளியிடப்பட்டது என விளக்கம் அளித்தது. எங்கள் தடுப்பூசி செலுத்தியதால் பக்க விளைவுகள் ஏற்படாது என்றும் கோவாக்சின் விளக்கம் அளித்துள்ளது.  

மேலும் கோவாக்சின் அறிமுகம் செய்வதற்க்கு முன்னர் சுமார் 27,000க்கும் மேற்பட்ட மாதிரிகளில் ஆய்வு செய்த பிறகே கோவாக்சின் உரிமம் பெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பின் போதும் சுழற்சி முறையில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கோவாக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்