கோவாக்சின் இரட்டை திரிபு கொண்ட உருமாறிய கொரநா வைரஸில் இருந்து பாதுகாக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் தடுப்ப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பு மருந்தானது தற்போது தீவிரமாக பரவி வரும் இரட்டை திரிபு கொண்ட உருமாறிய கொரோனா வைரஸில் இருந்தும் பாதுகாக்கும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், கோவாக்சின் இரட்டை திரிபு கொண்ட உருமாறிய கொரநா வைரஸில் இருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளதாகவும், மேலும் இங்கிலாந்து, பிரேசில் போன்ற நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் எதிராகவும் கோவாக்சின் தடுப்பு மருந்து செயல்படும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…