COVAXIN தடுப்பு மருந்து : முதல்கட்டமாக 375 பேருக்கு பரிசோதனை!
கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை சுமார் 1,100-க்கும் மேற்பட்டவர்கள் மீது பரிசோதிக்கப்பட உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்த, இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின், அடுத்த வாரத்திற்குள் மனிதர்கள் மீதான பரிசோதனைகளைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை சுமார் 1,100-க்கும் மேற்பட்டவர்கள் மீது பரிசோதிக்கப்பட உள்ளது. முதல் கட்டத்தில், 375 பேருக்கும், இரண்டாம் கட்டத்தில், 750 பேருக்கும் தடுப்பூசி அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த பரிசோதனைக்காக, நாடு முழுவதும், 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.