இந்தியாவை சேர்ந்த ஏஜென்சிகள் மூலம் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் நாளை முதல் மனித சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதற்காக கொரோனா பாதிக்காத தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து கோவாக்சின் எனும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளது. இதனை மனித சோதனைக்கு உட்படுத்த ஐ.சி.எம்.ஆர்-ஆனது, தேர்ந்தெடுத்த 12 நிறுவனங்களில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி கழகமும் ஒன்றாகும்.
375 தன்னார்வலர்கள் முதற்கட்ட, மற்றும் இரண்டாம் கட்ட மனித சோதனைக்கு உட்படுத்த படுகின்றனர். அதில், 100 தன்னார்வலர்கள் நாளை முதல் எய்ம்ஸ் மருத்தவ ஆராய்ச்சி குழுவில் பங்கேற்க உள்ளனர்.
இந்த கொரோனா தடுப்பூசி மனித சோதனையில் பங்கேற்க நினைக்கும் தன்னார்வலர்களுக்கு இதற்கு முன்னர் கொரோனா பாதித்து இருக்க கூடாது. அவர்கள் 18 முதல் 55 வயது இருக்க வேண்டும்.மேலும் விபரங்கள் அறியவும், இந்த மனித சோதனையில் பங்கேற்கவும், Ctaiims.covid19@gmail.com இல் மின்னஞ்சல் மூலமாகவோ, 7428847499 என்ற எண்ணிற்கு அழைத்தும் தன்னார்வலர்கள் இந்த மனித சோதனையில் பங்கேற்கலாம்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களை கொண்டு நாளை முதல் கோவாக்சின் மருந்துக்கான மனித சோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் தொடங்க உள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…