உருமாறிய கொரோனாவுக்கு கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது – ஆய்வில் தகவல்!
உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை அழிக்கும் விதமாக நாடு முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் மக்களுக்கு பயன் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு டோஸாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது உருமாறி பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக இவை குறைவான நோயெதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளது என கூறப்பட்டது.
எனவே, டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இன்று முதல் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனாவாகிய பி1, டெல்டா மற்றும் ஓமைக்ரான் ஆகியவற்றுக்கு எதிராக கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பரத் பயோடெக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.