விவாகரத்து பெற்ற பெண் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு…!

Published by
Rebekal

மும்பையில் வசித்து வரும் ஆசிரியை கடந்த 1992-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகளும் உள்ளது. பல ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்பதாக தற்பொழுது ஆசிரியை மற்றும் அவரது கணவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

எனவே தனது கணவனை விட்டுப் பிரிய வேண்டும் என விவாகரத்து கேட்டு ஆசிரியை நீதிமன்றம் சென்றுள்ளார். அப்பொழுது தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

தற்பொழுது தனது மனைவியிடம் இருந்து தனக்கு 15 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என்று விவாகரத்து பெற்ற ஆசிரியையின் கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான மனுவில் தனக்கு எவ்வித வருமானமும் இல்லாத பட்சத்தில் தனது மனைவி படிக்க வேண்டும் என்பதற்காக நான் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்பொழுது எனக்கு என்று எதுவும் கிடையாது, நோய்வாய்ப்பட்டு தவிக்கும் எனக்கு மாதம்தோறும் எனது மனைவியிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக பெற்று தரவேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ஆஜராகிய ஆசிரியை தனது கணவர் மளிகை கடை மற்றும் சொந்தமாக ஒரு ஆட்டோவும் வைத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

எனவே அந்த ஆட்டோவை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருவதாகவும், மகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்கு ஆசிரியையாக பணியாற்ற கூடிய மனைவி 3 ஆயிரம் ரூபாய் நிரந்தர ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.

Recent Posts

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

34 mins ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

56 mins ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

2 hours ago

குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

3 hours ago

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் தோட்டத்தில் குண்டு வீச்சு.. பதுங்கு குழிக்குள் நெதன்யாகு?

இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான  சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…

3 hours ago

விடுதலை 2 படத்தின் ‘தினம் தினமும்’ பாடல் வெளியீடு.!

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…

4 hours ago