ஃபேஸ்புக்கில் மத பிரிவினையை கருத்தை தெரிவித்த மாணவிக்கு 5 குர் ஆன் விற்க கூறி-நீதிமன்றம் உத்தரவு

Default Image

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி ரிசா பார்தி.இவர் தனது ஃபேஸ்புக்கில் மத பிரிவினையை தூண்டும் விதமாக கருத்தை தெரிவித்ததாக கூறி  கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மாணவி ரிசா பார்தி கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள்  சில போராட்டங்கள் நடத்தினர்.இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள்  சில போராட்டங்கள் நடத்தினர்.இந்த போராட்டத்தால் அங்கு பதட்டம் நிலவியது.இதை தொடர்ந்து மாவட்ட எஸ் பி  அஷுதாஸ் சேகர் இருத்தரப்பினரையும் சமாதானம் செய்தார்.

இந்நிலையில் கைது செய்துப்பட்ட மாணவியை ராஞ்சி நீதிமன்றம் நிபந்தனை விடுதலை செய்தது.அத்துடன் 5 குர் ஆன் புத்தகங்களை 15 நாள்களில் விற்க வேண்டும் என உத்தரவு விட்டது.அதன்படி ஒரு குர் ஆன் புத்தகத்தை இஸ்லாமிய குழுவிடம் கொடுக்கவேண்டும் எனவும் , மீதம் உள்ள நான்கு குர் ஆன் புத்தகங்களை பள்ளி ,கல்லூரி  நூலகங்களில் வைக்கலாம் என நீதிமன்றம் கூறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்