இணையத்தை சுற்றும் இளசுகளை கட்டுப்படுத்த வயது வரம்பு?? நிர்ணயம்–ம.அ.,நோட்டீஸ்
சமூக வலைதளங்களை சிறுவர், சிறுமியர் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த, வயது வரம்பை நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படிப்பு பயிலும் சஸ்கந்த் பாஜ்பாய், அப்யுதயா மிஸ்ரா என்ற 2 மாணவர்கள் தாக்கல் செய்த பொது நல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில் சமூக வலைதளங்களை, விளம்பரம் செய்யும் தளமாக பலரும் மாற்றி வருகின்றனர். ஆபாச படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.சமூக வலைதளங்களை பயன்படுத்த,இந்தியாவில் வயது வரம்பு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் மனுவில் பள்ளி மாணவ, மாணவியரிடம், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பழக்கமானது தற்போது அதிமாகி வருவதாகவும் இதனால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் சமூக வலைதளங்களை பயன்படுத்த, வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். இது குறித்துசரியான நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.