சிதம்பரத்திடம் அக்டோபர் 30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அக்டோபர் 30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .அதில்,அமலாக்கத்துறை மனுவை ஏற்று, அக்டோபர் 24-ஆம் தேதி வரை சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அக்டோபர் 24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று .சிதம்பரத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை.
இதையடுத்து ப.சிதம்பரத்திடம் அக்டோபர் 30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது . ஏற்கனவே 7 நாட்கள் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 30-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.