மத்தியஅரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிக்கு எதிராக நாட்டில் பல இடங்களில் பேரணிகளும் , போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவளர்களுக்கும் , எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் நேற்று வரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த 20-ம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார்.
இந்த பேரணியில் அமுல்யா லியோனா என்ற இளம்பெண் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என கோஷம் எழுப்பினார். அவரை தடுத்து ஓவைசி நிறுத்தினார்.பின்னர் இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் அமுல்யாவின் நீதிமன்ற காவலை மார்ச் 5-ம் தேதி வரை நீட்டித்து உள்ளது.
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…