சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு.
பத்ராசால் நில மோசடி வழக்கில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி, கடந்த மாதம் பத்ராசால் நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய பிரவின் ராவத்திடம் இருந்து பணப் பலன்கள் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற காவலில் உள்ள சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், சஞ்சய் ராவுத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து, ஜாமீன் மனு மீதான விசாரணையும் அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…