கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட 12 பேருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.!

Default Image

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட 12 பேருக்கும் நீதிமன்ற காவலலை நீடித்து கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உட்பட 12 பேருக்கும் அக்டோபர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து கொச்சி சிறப்பு தேசிய விசாரணை முகமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரே‌ஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் ன்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், இன்று ஸ்வப்னா சுரேஷ் உட்பட 12 குற்றவாளிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொச்சி சிறப்பு தேசிய விசாரணை முகமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வாதத்தின்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ட்ரீம் சுரேஷ் உடல் ஊனமுற்று அவதிப்பட்டு வருவதால் ஜாமீன் வழங்குமாறு கோரியிருந்தனர். ஜாமீன் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்ததோடு, சப்னாவை அவரது உறவினர்களைப் பார்க்க அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், என்ஐஏ காவலில் உள்ள நான்கு சந்தேக நபர்களும் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில், சந்தீப் நாயர், முகமது அன்வர், ஷமிம், முகமது அலி ஆகியோர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே, கேரள உயர்நீதிமன்றத்தில் சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில், அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்