மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு!
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணீஷ் சிசோடியா ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டதையடுத்து, அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கில் நீதிமன்ற காவலை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கடந்த மார்ச் 9ம் தேதி பிஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குமுன் சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலையும் ஏப்ரல் 17 வரை நீட்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.