Delhi CM Arvind kejriwal [File Image]
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி இரவு கைது செய்தனர். அதற்கு முன்னதாக இதே வழக்கில், டெல்லி முன்னாள் அமைச்சர்கள், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவில் சில வாரங்களுக்கு முன்னர் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். அவர் மீதான 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதை தொடர்ந்து, இன்று திகார் சிறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவேஜா, அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று, வரும் மே மாதம் 7ஆம் தேதி வரையில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருக்கும் கவிதாவும் காணொளி மூலம் நீதிபதி முன்னர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கும் வரும் மே 7ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலை நீட்டித்துநீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் , அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…