Extends judicial custody of Arvind Kejriwal (HT_PRINT)
Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு.
டெல்லியில் கொண்டுவரப்பட்டு பின்னர் திரும்பி பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடிய ஒரு வருடத்திற்கு மேலாக திகார் சிறையில் இருந்து வருகிறார்.
இதன்பின் மதுமான கொள்கை முறைகேடு தொடர்பான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதா கடந்த மாதம் 15ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், சமீபத்தில் சிபிஐயும் அவரை கைது செய்தது.
தற்போது கவிதா நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதே வழக்கில் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஒருவார அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தற்போது அவரும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டு காவலில் சிறைக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, கைதாகி சிறையில் உள்ள கவிதாவின் நீதிமன்ற ஏப்ரல் 23 வரை நீடிக்கப்பட்ட நிலையில், தற்போது கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலும் ஏப்.23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே வழங்கப்பட 15 நாட்கள் நீதிமன்றம் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் 8 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமலாக்கத்துறை கைது மற்றும் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 24ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…