கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷிடம் அமலாக்கத்துறையினர், சிறையில் வைத்தே 2 நாட்கள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தங்கக்கடத்தல் வழக்கை அமலாக்கத்துறை , சுங்கத்துறை மற்றும் என்ஐஏ தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷிடம் விசாரணை நடத்த கொச்சி முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். அதற்கு நீதிமன்றம், ஸ்வப்னாவை சிறையில் வைத்தே நாளை மற்றும் நாளை மறுநாள் விசாரணை நடத்த அனுமதியளித்துள்ளது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…