குழந்தை பாக்கியத்திற்காக 7 வயது சிறுமியை நரபலி கொடுத்து கொடூரமாக கொன்ற நிகழ்வு உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் மிகப் உயர்ந்த வளர்ச்சியை எட்டிய நிலையிலும், மூடநம்பிக்கையால் பலர் நரபலி கொடுக்கும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர் . அந்த மூடநம்பிக்கையால் பலியான சிறுமி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தின் கான்பூரில்தான் நிகழ்ந்துள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் கட்டம்பூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி தீபாவளி தினத்தன்று இரவு முதல் காணவில்லை. அந்த சிறுமியின் குடும்பத்தினர் அப்பகுதிக்கு அருகிலுள்ள காடு உட்பட அனைத்து பகுதிகளிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனையடுத்து ஞாயிறன்று காலை அந்த சிறுமியின் சடலம் உடலுள்ள பாகங்கள் எடுக்கப்பட்ட நிலையில் காட்டிலிருந்து கிராமவாசிகளால் கண்டெடுக்கப்பட்டது .
அதனையடுத்து உடலை கைப்பற்றிய உத்திரப்பிரதேச காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக , அங்குல் குயில்(20), பீரன்(31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் . அதனையடுத்து இருவரிடமும் நடைபெற்ற விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு , சிறுமியின் நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்களை அகற்றி விட்டு, அதனை நரபலிக்காக பரசுராம் என்பவருக்கு கொடுத்ததாக ஒப்புக் கொண்டனர் .
அதனையடுத்து திங்களன்று கைது செய்யப்பட்ட பரசுராம் மற்றும் அவரது மனைவி முதலில் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை . அதனையடுத்து உண்மையை கூறிய பரசுராம், 1999-ல் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு இதுவரை குழந்தை இல்லை .எனவே சிறுமியை கடத்தி நுரையீரல் உடல் பாகங்களை அகற்ற தனது மருமகன் அங்குல் மற்றும் அவரது நண்பனுக்கு பணம் மற்றும் மது வாங்கி கொடுத்து ஒப்பு கொள்ள வைத்ததாக கூறினார்.
அதன்படி சனிக்கிழமை இரவு பட்டாசுகளை வாங்க வெளியே சென்ற இருவரும் குழந்தையை கடத்தி அருகிலுள்ள காட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர் . அதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவரும் சிறுமியின் நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்களை வெளியே எடுத்துள்ளனர் .
அதனையடுத்து சிறுமியின் சடலத்தை குழந்தை பேறு கிடைப்பதற்காக நரபலி கொடுக்க பரசுராமிடம் கொடுத்துள்ளனர். பரசுராம் மற்றும் அவரது மனைவிக்கு குழந்தை பேறு இல்லாததால், ஏதோ ஒரு போலி சாமியாரின் பேச்சைகேட்டு ஒரு சிறுமியின் உயிரை அநியாயமாக எடுத்துள்ளனர்.
இதையடுத்து கொலைக்கு காரணமான நான்கு பேரையும் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த கொடூரமான குற்றத்தை கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மூடநம்பிக்கையால் ஒரு குழந்தைக்காக மற்றொரு குழந்தையை அநியாயமாக கொன்ற இந்த கொடூர செயல் உத்திரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…