நடு கடலில் ஏற்பட்ட தீவிபத்து.! ஹெலிகாப்டரில் பறந்த இந்திய கடலோர காவல்படை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியாவுக்கு 20 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி நியூடைமண்ட் என்ற கப்பல் இலங்கை கடற்பகுதி அருகே திடீரென தீப்பிடித்தது.
குவைத் நாட்டிலிருந்து இந்திய நாட்டின் ஒடிசாவில் உள்ள பிரதீப் துறைமுகத்துக்கு, எம்டி – நியூடைமண்ட் என்ற கப்பல், கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது. இது பிரதீப் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டதாகும். நேற்று இந்த நியூடைமண்ட் கப்பல், இலங்கை கடற்பகுதியில் வந்தபோது, இன்ஜின் அருகே திடீரென தீப்பற்றி உள்ளது. இந்த தீ, வேகமாக கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. பின்னர் தகவலறிந்து வந்த இலங்கை கடற்படை கப்பல்கள், சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
மேலும், முடிந்தவரை தீயை அணைக்க முயற்சித்தும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து, இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த சவுர்யா, சாரங், சமுத்ரா ஆகிய கடலோர காவல் படை கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த கப்பலில் 20 பேர் இருந்ததாகவும், அதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல், மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு சொந்தமானது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்துள்ளது.
இதுகுறித்து இந்திய இந்தியக் கடலோரக் காவல்படை தங்கள் ட்விட்டர் பதிவில், 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்ததாகவும், டேங்கர்களின் பின்புறத்தில் 2 மீட்டர் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இலங்கைக் கடற்படை மீட்புக்காக 2 கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது. நல்ல வேளையாக கப்பலின் சரக்குப் பகுதிக்கு தீ பரவவில்லை. இலங்கையிலிருந்து 65 கிமீ தொலைவில் நியூடைமண்ட் கப்பல் தீப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.