நாளை வாக்கு எண்ணிக்கை..! காங்கிரஸ் தலைவர் இல்லத்தில் உயர்மட்ட குழு ஆலோசனை!

Mallikarjun Kharge

நாளை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், கார்கே இல்லத்தில் உயர்மட்ட குழு ஆலோசனை.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 73.19% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 224 தொகுதிகள் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணி முதல் நடைபெறுகிறது.

காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் 2,615 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர். ஆட்சி அமைக்க போவது காங்கிரேசா? பாஜகவா? என்பது நாளை தெரியவரும். இந்த சமயத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் 146 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாளை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், கார்கே இல்லத்தில் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்