நாளை காலை 8 மணிக்கு 4 மாநில வாக்கு எண்ணும் பணி தொடக்கம்..!
நடந்து முடிந்த மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்பில் ராஜஸ்தானில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்றும் அதேசமயம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகளுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் , நாளை காலை 8 மணிக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கவுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதைத் தொடர்ந்து மின்னணு இயந்திரங்கள் வாக்குப்பதிவு (EVM) எண்ணப்படும். மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் டிசம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.