ஆட்சி அமைப்பது யார்.? 4 மாநில வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

சமீபத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இன்றும், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நாளை  நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒரே நாளில் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி, மிசோரம் தேர்தல் முடிவுகளை டிசம்பர் 4ம் தேதி (நாளை) அறிவிக்க முடிவு செய்தது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.  வாக்கு எண்ணிக்கைக்கு முன் வந்த கருத்துக் கணிப்புகளைப் பற்றி பேசுகையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு இன்னும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு ​​அதைத் தொடர்ந்து  8:30 மணி முதல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே 4 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை இன்னும் பணி தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்