NDA vs I.N.D.I.A : 7 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்…

Congress vs BJP

இடைத்தேர்தல் முடிவுகள் : 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கப்பட்டன.

கடந்த ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்ற அதே நாளில் வடகிழக்கு மாநிலங்களில் 6 மாநிலங்களில் 12 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் ஜூலை 10 அன்று நடைபெற்று முடித்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை  மணி முதல்  எண்ணப்படுகின்றன.

இதில் தமிழகத்தில் திமுக வேட்பாளர் (I.N.D.I.A கூட்டணி) அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். பாமக வேட்பாளர் (N.D.A கூட்டணி) சி.அன்புமணி பின்தங்கியுள்ளார். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது மின்னணு வாக்குப்பதிவு முடிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்கத்தில் மணிக்தலா, பாக்தா, ரனாகாட் தக்ஷின் மற்றும் ராய்கஞ்ச்  ஆகிய 4 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள ஹெல்ஞ்சா உயர்நிலைப் பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்படுகின்றன. இன்னும் முன்னிலை நிலவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ருபாலி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கியது. இன்னும் முன்னிலை நிலவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. அத்தொகுதி ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ பீமாபாரதி ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அவர் தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில், டேஹ்ராவில் பாஜக வேட்பாளர் 200 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளர் என்றும், அதனை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் சற்று பின்தங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து, ஹமிர்பூர், நலகர் தொகுதியிலும் பாஜக காங்கிரஸ் நேரடி போட்டி நிலவுகிறது. அங்கு இன்னும் முன்னணி நிலவரங்கள் வெளியாகவில்லை.

பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இதுவரை முடிந்த வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 2000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் பின்தங்கியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூரு ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்து பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வழக்கம் போல முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு இன்னும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகவில்லை.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமர்வாடா தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன அங்கும், இன்னும் முன்னிலை நிலவரங்கள் உறுதியாக வெளியாகவில்லை. அங்கும் பாஜக , காங்கிரஸ் நேரடி போட்டி நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்