நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. 23 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 7,788 ஆண்களும் 7,468 பெண்களும் அடங்குவர்.
இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று அதாவது டிசம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் 28 அன்று தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (NDPP) எம்எல்ஏ நோக் வாங்னாவ்( Noke Wangnao) காலமானார். இதைதொடர்ந்து தாபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தாபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இங்கு ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சட்டமன்றத் தொகுதி எண் 43 என்பது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடமாகும்.
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…