நாகாலாந்து இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. 23 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 7,788 ஆண்களும் 7,468 பெண்களும் அடங்குவர்.

இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று அதாவது டிசம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது.  கடந்த ஆகஸ்ட் 28 அன்று தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (NDPP)  எம்எல்ஏ நோக் வாங்னாவ்( Noke Wangnao) காலமானார். இதைதொடர்ந்து தாபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தாபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இங்கு ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளர்  மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சட்டமன்றத் தொகுதி எண் 43 என்பது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்