வாக்கு எண்ணிக்கை – புதுச்சேரியில் 8 முகவர்களுக்கு கொரோனா!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 2 தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும் என்றும் நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரி தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள வேட்பாளர்கள், முகவர்களுக்கு பரிசோதனை முகாம் அமைத்து, பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இதனையடுத்து இன்று புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 7 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள், முகவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 110 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிந்து, உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)