இந்தியாவை ஆளப்போவது யார்.? வாக்கு எண்ணிக்கை தொடக்கம்….
மக்களவை தேர்தல்: 543 தொகுதிகளில், தேர்தல் நடைபெற்று முடிந்த 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) எண்ணப்படுகிறது.
முதற்கட்டமாக காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதன் முடிவுகள் 8.30 அளவில் தெரியவரும் என்றும் அதற்கடுத்து வாக்கு இயந்திரத்தில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, குஜராத் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டதால் மீதமுள்ள தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
அதே போல, ஆந்திர பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், ஒடிசாவில் 147 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது, 39 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறுகிறது. தமிழகம் முழுக்க வாக்கு எண்ணும் மையங்களில் 30 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.