கள்ளச்சாராயம் விவகாரம்! 70க்கும் மேற்பட்டோர் பலி.. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பலியாகியதை அடுத்து 5 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்.
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஆளும் அரசை, எதிர்க்கட்சிகள் விமர்சித்து குற்றச்சாட்டி வருகிறது. பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்திருந்தார். குடித்தால் இறந்து விடுவீர்கள் என எச்சரித்தும், தொடர்ந்து அப்படி செய்தால் எப்படி நிவாரணம் வழங்க முடியையும் எனவும் முதலான்ச்சர் நிதிஷ் குமார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பலியாகியதை அடுத்து 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் இறந்ததை அடுத்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் இசுவாபூர் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி உட்பட 5 பேர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.