Countdown Start: நாளை மாலை விண்ணில் பாய்கிறது PSLV C50.!
பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்டின் கவுண்ட் டவுன் தொடக்கம். நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் பாய்கிறது இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஆண்டு இஸ்ரோ ஏவும் இரண்டாவது ராக்கெட் பி.எஸ்.எல்.வி சி50 சிஎம்எஸ் -01. இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள், கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை சேகரிப்பதற்கு விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பட்டு உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடப்படுகிறது.