நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கமாகியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் இன்று அதிகாலை 3.43 மணிக்கு பூமியை ஆய்வு செய்யும் செயற்கோளை சுமந்தவாறு ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியை கண்காணிக்கும் EOS – 3 என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் பூமியின் இயற்கை பேரழிவு, வனவியல், விவசாயம், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்துகொள்ள இந்த செயற்கைக்கோள் உதவும். EOS – 3 செயற்கோளை பூமியை கணிப்பதில் துல்லியமானது என்பதால் வானில் இருக்கக்கூடிய கண் என்று அழைக்கப்படுகிறது. EOS – 3 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது, மேலும் இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.
சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இந்த செயற்கைக்கோள் நாளை அதிகாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவவுள்ளது. மேலும், GSLV F-10 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட உள்ள இந்த செயற்கைகோளில் முதல்முறையாக வெப்பத்தில் இருந்து செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ‘EOS -3’ என்ற செயற்கைகோள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. GSLV ரகத்தின் உள்ள ராக்கெட்டின் மூலமாக செலுத்தப்பட உள்ள 14ஆவது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…