ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கவுன்சிலர் கார் ஏற்றி கொலை..!
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
காக்கிநாடா கவுன்சிலர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு ரமேஷ் விபத்தில் அடிபட்டு இருப்பதாக காவல்துறை தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூய்விற்கு அனுப்பிவைத்தனர்.
இருப்பினும் இந்த விபத்தில் போலீசாருக்கு சந்தேகம் இந்த நிலையில் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ரமேஷ் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த வீடியோவில் ரமேஷ் மீது இரண்டு, மூன்று முறை காரை ஏற்றி கொலை செய்யும் பத பதைக்க சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.