ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 9-ஆம் தேதி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க விவகாரத்தில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அவர் மீது ஆந்திர மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
மேலும் அவர் மீது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறையினர் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர்.
இதனையடுத்து, சந்திரபாபு கைதுக்கு பலரும் கண்டனங்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷுற்கு போன் செய்து மக்கள் நலனுக்காக எப்போதும் போராடுபவர் சந்திரபாபு பொய் வழக்குகள் அவரை எதுவும் செய்யாது சந்திரபாபு நாயுடு அவரது நற்செயல்களும், தன்னலமற்ற பொது சேவையும் சிறையிலிருந்து அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும் என ஆறுதல் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க திட்டமிட்டு இருந்ததாகவும் குடும்ப விழா இருந்த காரணத்தால் சந்திக்க முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோவை சென்ற ரஜினியை செய்தியாளர்கள் சந்தித்தார்கள். அப்போது ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு குறித்து பேசினார்.
அதில் ” ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நான் சந்திக்க இருந்தேன். ஆனால், குடும்ப விழா காரணமாக செல்ல முடியவில்லை” என கூறியுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயலானது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயலானது இன்று பிற்பகல்…
சென்னை : வங்கக்கடலில் உருவெடுத்து இருக்கும் ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து மேற்கு வடமேற்கு திசையில் 140கி.மீ தொலைவில் நிலை கொண்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று பிற்பகல் ஃபெஞ்சல் புயலாக உருமாறி வடதமிழகத்தை நோக்கி…
சென்னை : ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும்…
சென்னை : வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் கரையை கடக்கும் என…
சென்னை : ஃபெஞ்சல் புயலால் சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்துடன் கூடிய கனமழை பெய்கிறது. தற்பொழுது, புதுச்சேரிக்கு கிழக்கே…