5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல்.! திமுக எம்.பி ஆ.ராசா குற்றசாட்டு.!

Default Image

5  லட்சம் கோடி வரையில் 5 ஜி ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1.5 லட்சம் கோடிவரையில் தான் ஏலம் போயுள்ளளது. – திமுக எம்.பி.ஆ.ராசா குற்றசாட்டு. 

5 ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் தான் நடைபெற்று முடிந்தது. இந்த 5 ஜி அலைக்கற்றை  மொத்தமாக ரூ.1,50,173 கோடி வரையில் ஏலம் போயுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜியோ ரூ.88,078 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் ரூ.43,048 கோடி ஏலத்தொகைக்கும், வோடஃபோன் – ஐடியா நிறுவனம் ரூ.18,799 கோடி ஏலத்தொகைக்கும், அதானி நிறுவனம் ரூ.212 கோடி க்கும் குறிப்பிட்ட அளவுக்கு அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ள்ளது.

இது குறித்து குற்றம் சாட்டியுள்ள திமுக எம்.பி ஆ.ராசா கூறுகையில், ‘ 5  லட்சம் கோடி வரையில் 5 ஜி ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1.5 லட்சம் கோடிவரையில் தான் ஏலம் போயுள்ளளது. இது திட்டமிடுதலில் குழப்பமா அல்லது மத்திய அரசு சில கம்பெனிகளுடன் சேர்ந்து கூட்டுசதியில் ஈடுபட்டதா என்பதை விசாரிக்க வேண்டும்.’ என நாத பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்