BREAKING : நீட் தேர்வு முடிவு – புதிய பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் புதிய பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களி ல் குளறுபடி ஏற்பட்டதால், இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதாவது, நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட, தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில், உத்திரகாண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி மாணவர்கள் http://ntaresults.nic.in/neet20/result/resultneet.htm என்ற வலைத்தளத்தில் தங்களின் தேர்வு முடிவுகளை காணலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024