டெல்லியில் மாநகராட்சி தேர்தல்.! மெட்ரோ ரயில் நேரம் மாற்றம்..!!
டெல்லியில் வரும் டிச-4 ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையானது அதிகாலை 4 மணி முதல் இயங்க இருக்கிறது.
டெல்லியில் 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் டிச-4 ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 வரை நடத்தப்படுகிறது. இந்த மாநகராட்சி தேர்தலுக்காக ஞாயிற்றுக்கிழமை அன்று மெட்ரோ ரயில் சேவையானது, அனைத்து தடங்களில் இருந்தும் அதிகாலை 4 மணிக்கு இயங்க ஆரம்பிக்கிறது.
காலை 4 மணியிலிருந்து 6 மணி வரை அனைத்து ரயில்களும் 30 நிமிட இடைவெளியிலும், அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் வழக்கமான கால அட்டவணைப்படி இயஙகும் என டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.