கொரோனா வைரஸ் பாதிப்பு காரணாமாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான சில வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2 பேரை காவுவாங்கி உள்ளது.மத்திய,மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஹோலி பண்டிகை விடுமுறையானது முடிந்து திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் உச்சநீதிமன்ற அலுவல் பணிகள் தொடங்க உள்ளது.அதன்படி விசாரணைக்கான வழக்குகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உச்சநீதிமன்றத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதில் குறிப்பாக முக்கியமான வழக்குகளை மட்டுமே உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்றும் அதற்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்டயாராக இருந்தாலும் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றறிக்கை வாயிலாக உச்சநீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் திங்கட்கிழமை பல அமர்வுகளின் விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் திருத்தப்பட்ட புதிய விசாரணை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…