கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு..!அச்சத்தில் மக்கள்
கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றது.சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, குறிப்பாக இத்தாலியில் 1,016 ஆக அதிகரித்துள்ளது.அதே போல் உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,627லிருந்து 4,972 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139லிருந்து 1,34,559 ஆக அதிகரித்துள்ளது.இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,939 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவையும் விட்டுவைக்காத இந்த கொரோனா வைரஸ் முதல் உயிரை குடித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் முதல் உயிரிழப்பானது கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் உயிரிழந்த 76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.