ஆந்திராவில் அனையாத கொரோனா தொற்று… நேற்று மட்டும் 48 பேருக்கு தொற்று உறுதி என தகவல்
நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா தொற்றின் வேகம் தனியாத நிலையில் தற்போது மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகளில் அதிக தொற்று உள்ள மாநிலமாக மஹாராஷ்ட்ரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. இதேபோல், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புகள் குறைந்த பாடில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து தற்போது 2000 என்ற எண்ணிக்கையை கடந்தது. இந்நிலையில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,205 ஆக உள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் புதிதாக இந்த தொற்று நோய் பாதித்தவர்களில், கர்னூல் மற்றும் நெல்லூரில் தலா 9 பேர் மற்றும் சித்தூரில் 8 பேர் என தெரிய வந்துள்ளது. மாநிலத்தில் நோய் தொற்றுக்கு 803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1353 பேர் நோய் தொற்று குணமடைந்து வீடு திரும்பினர் என்று அம்மாநில சுகாதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.