நமது பாரத பிரதமரால் அறிவிக்கப்பட்ட செயலியான ஆரோக்கிய சேதுவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதியை கண்டறிய உதவும் வகையில் ஆரோக்கிய சேது செயலியை கடந்த மாதம் மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பதிவிறக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து இந்த செயலி அறிமுகம் ஆன 13 நாட்களில் இந்த செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த செயலி அறிமுகமான குறுகிய காலத்தில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று என்ற பெருமையை தற்போது ஆரோக்கிய சேது பெற்றுள்ளது .
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…