அனைத்து கிளினிக் மற்றும் நர்சிங்க் ஹோம்களை திறக்க மத்திய உள்துறை உத்தரவு….
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதும் பரவிய பெருந்தொற்றாக மறியது. இந்த தொற்று இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை. எனவே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இருக்கும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகள் இயக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அவர்கள் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியார் கிளினிக்குகள், நர்சிங் ஹோம் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆய்வகங்கள் ஆகியவை செயல்படுவதை அந்த்ந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் தனியார் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பாக தங்கள் பணியிடத்திற்கு செல்ல அந்தந்த மாநில அரசுகள் வழிவகை செய்யவேண்டும் என மத்திய உள்துறை சார்பாக அனைத்து மாநிலத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.