உலகம் முழுவதும் தற்போது நிலவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் ஐக்கிய அரபு எமிரேட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு முடிவெடுத்தது. இந்நிலையில் இந்த பணியை வரும் 7-ம் தேதி மத்திய அரசு தொடங்குகிறது. இதன் முதல் கட்டமாக இரு ஏர் இந்தியா விமானங்கள் துபாய் சென்று அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர இருகின்றன. இந்த இரு விமானங்களும் கேரள மக்களுக்காக இயக்கப்படுகிறது என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் பவன் கபூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யு.ஏ.இ.,க்கான இந்தியத் தூதர் பவன் கபூர் தெரிவித்தாவது, இங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் 7-ம் தேதி முதல் ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்காக முதலில் இரு விமானங்களும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.ஒரு விமானம் அபுதாபியிலிருந்து கொச்சிக்கும், மற்றொரு விமானம் துபாயிலிருந்து கோழிக்கோட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த விமானத்தில் இங்கு வேலையிழந்து தவிக்கும் இந்தியர்கள், மருத்துவ வசதி உடனடியாகத் தேவைப்படுவோர், முதியோர், கர்ப்பணிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பய்னத்திற்கு கடந்த சில நாட்களாக ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் பட்டியல் பிரிக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். 7-ம் தேதி முதல் நாள்தோறும் விமானங்கள் இயக்கப்படும் எனத் அவர் கூறினார்.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…