குடிமகன்களின் வெறித்தனம்… மதுக்கடையை திறந்த உடனே 95 ஆயிரத்திற்கு மதுபாட்டில்களை வாங்கிய ஒற்றை நபர்…

Published by
Kaliraj

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக  முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஊரடங்கு தற்போது  மே 17 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையில் நேற்று முதல் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

இதனால் நேற்று காலை முதலே மதுக்கடைக்கடைகளின் முன் மதுப்பிரியர்கள் கூட தொடங்கிவிட்டனர். மதுக்கடைகளில் 5 பேருக்கு மேல் கூட கூடாது, சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும்  என்ற விதிகள் உள்ள போதிலும் கடையை திறந்த உடனே  சுமார் 1 கிமீ தூரத்திற்கும் மேல் வரிசையில் நின்றனர். சிலர்தான் வரிசையில் நின்றனர். இதில் மேலும் பலர் முந்திக் கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

கடை எப்ப சார் திறப்பீங்க".. ரூ.52,000 ...

அவர்களை காவல்துறையினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.ஆனால் கர்நாடகா மாநிலம் மது விற்பனையில் பல சாதனைகளையே படைத்துள்ளது. கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.45 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. குறிப்பாக அங்குள்ள மதுக்கடைகளின் முன்பு ஆண்கள் ஒரு வரிசை என்றால், பெண்கள் ஒரு வரிசை என்று தனி தனி வரிசைகள் களைகட்டின. இதனிடையே பெங்களூரில் உள்ள மற்றொரு கடை மேலும் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

அந்த கடையில் ஒரே ஒரு நபர் மட்டும் ரூ.95,347-க்கு  மதுபானங்களை வாங்கியுள்ளார்.மற்றொரு நபர் ரூ.52, 841-க்கு மதுபானங்களை வாங்கி உள்ளார். அதுமட்டுமல்லாது அதற்கான பில்லும்  சமூக  வலைதளங்களில் வைரலானது. பொதுவாக, சில்லரை கடையில் மொத்தமாக விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே விற்பனை செய்த  அந்த கடை ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மதுப்பிரியரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!

இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…

23 minutes ago

“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…

53 minutes ago

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

2 hours ago

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

3 hours ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

10 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

11 hours ago