குடிமகன்களின் வெறித்தனம்… மதுக்கடையை திறந்த உடனே 95 ஆயிரத்திற்கு மதுபாட்டில்களை வாங்கிய ஒற்றை நபர்…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஊரடங்கு தற்போது மே 17 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையில் நேற்று முதல் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
இதனால் நேற்று காலை முதலே மதுக்கடைக்கடைகளின் முன் மதுப்பிரியர்கள் கூட தொடங்கிவிட்டனர். மதுக்கடைகளில் 5 பேருக்கு மேல் கூட கூடாது, சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ள போதிலும் கடையை திறந்த உடனே சுமார் 1 கிமீ தூரத்திற்கும் மேல் வரிசையில் நின்றனர். சிலர்தான் வரிசையில் நின்றனர். இதில் மேலும் பலர் முந்திக் கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
அவர்களை காவல்துறையினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.ஆனால் கர்நாடகா மாநிலம் மது விற்பனையில் பல சாதனைகளையே படைத்துள்ளது. கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.45 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. குறிப்பாக அங்குள்ள மதுக்கடைகளின் முன்பு ஆண்கள் ஒரு வரிசை என்றால், பெண்கள் ஒரு வரிசை என்று தனி தனி வரிசைகள் களைகட்டின. இதனிடையே பெங்களூரில் உள்ள மற்றொரு கடை மேலும் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
அந்த கடையில் ஒரே ஒரு நபர் மட்டும் ரூ.95,347-க்கு மதுபானங்களை வாங்கியுள்ளார்.மற்றொரு நபர் ரூ.52, 841-க்கு மதுபானங்களை வாங்கி உள்ளார். அதுமட்டுமல்லாது அதற்கான பில்லும் சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுவாக, சில்லரை கடையில் மொத்தமாக விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே விற்பனை செய்த அந்த கடை ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மதுப்பிரியரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.