சொந்த மாநிலம் திரும்பும் தொழிலாளர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்டால் ஊக்கத்தொகை… பீகார் மாநில முதல்வர் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனாவின் வேகம் தனியாத சூழலில் பல்வேறு மாநிலங்களுக்கு பிழைப்புக்காக வெளிமாநிலங்களில் சென்று தற்போது சிக்கி தவித்து வந்த சூழலில் தற்போது ,வெளிமாநிலங்களிலிருந்து அந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். அதில், அவ்வாறு திரும்பும் தொழிலாளர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தவும், அவ்வாறு 21 நாட்கள் முடிந்து திரும்பும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பிற மாநிலங்களில் இருந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக, சிறப்பு ரயில் ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், பீகார் மாநிலம் திரும்பும் தொழிலாளர்கள் யாரும் தாங்கள் பயணிக்கும் ரயிலுக்கு ரயில் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும், பீகார் வரும் தொழிலாளர்கள் 21 நாட்கள் மாவட்ட முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனை தொடர்ந்துதொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.