டெல்லிவாசிகள் கொரோனாவுடன் வாழ தயாராகுங்கள்… மாநில மக்களுக்கு கெஜ்ரிவால் அறிவுரை…

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.மக்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று  தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அம்மாநில  முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டெல்லியில் உள்ள 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை  மட்டுமே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு நாம்  பரிந்துரை விடுப்போம். தற்போது டெல்லியில் கொரோனா வைரஸ்  பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது வரும் என்பது  சாத்தியமில்லாதது. ஏனெனில், நாடு முழுவதும் அப்படி ஒரு நிலை இல்லை. எனவே மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுடன்  வாழ  தயாராக வேண்டும். டெல்லி முழுவதையும் சிவப்பு மண்டலமாக  மத்திய அரசு அறிவித்துள்ளது.  எனவே  சந்தைகள், மால்களை திறக்க முடியாது. கடைகள் மூடப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

வேலை இழந்தவர்கள் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னும் பலர் இங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். நீண்ட நாள்களுக்கு டெல்லியால் இந்தப் பிரச்சனையைத் தாங்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் அவர்,  பொது இடங்களில் எச்சில் உமிழ்போர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள்  யாரும் வெளியே வர அனுமதி கிடையாது என்றும்   அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் நாளை முதல் செயல்படும். ஆனால், விமானம், மெட்ரோ, பேருந்து போக்குவரத்து ரத்து நீடிக்கும் என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்