கொரோனா ஊரடங்கால் தனது நகைகடையை காய்கறி கடையாக மாற்றிய நபர் குறித்த ருசீகர சம்பவம்…..
உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் பலர் பொருளாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
இதில் ஒரு விதிவிலக்காக அத்தியவசிய பொருள்களான உணவு, காய்கறி, மருந்து, பால் என சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கு தற்போது ஒரு நகைகடை நடத்திய ஒருவரை காய்கறி வியாபாரியாக மாற்றிய ருசீகர சம்பவம் குறித்த செய்தி தொகுப்பை பார்க்க இருக்கிறோம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரின் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சோனி, இவர் அப்பகுதியில் ”ஜி.பி. ஜுவல்லரி ஷாப்” என்ற நகை கடையை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்படுள்ள ஊரடங்கின் காரணமாக வருமாணம் இன்றி தவித்து வந்த அந்த சோனியின் குடும்பம் தனது நகைகடைக்கு பதிலாக அதை ஒரு காய்கறி கடையாக மாற்றியுள்ளார். இது குறித்து கருத்து கூறிய அவர், மார்ச் மாதம் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து சில வாரங்கள் தங்களது குடும்பத்தை கவனித்த என்னால் அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியவில்லை.
நாங்கள் பல நாட்களாக எங்கள் வீடுகளில் அமைதியாக உட்கார்ந்து இருந்தோம். யாராவது உணவு அல்லது நிவாரணம் தருவார்களா என ஏங்கி தவித்து கொண்டிருந்தோம். அப்போது நான் ஒரு முடிவு எடுத்தேன். எனது நகை கடையை காய்கறிகடையாக மாற்றுவது என்று, சும்மாக வீட்டில் இருப்பதை விட காய்கறி வியாபாரம் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். இதன் மூலம் எனது வயதான அம்மா, எனது குடும்பம், காலமான தம்பியின் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது . இந்த கொரோனா ஊரடங்கு நகைடையை காய்கறி கடையாக மாற்றிய சம்பவம் அனைவரயும் சிந்திக்க செய்துள்ளது.