இயற்கை முறையில் விவசாயம் செய்வதில் சிறப்பு பெயர் பெற்ற மாநிலமான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்கள் மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த மார்ச் மாதம் தமிழகத்தின் சென்னைக்கு வந்திருந்தன. அங்கு சிகிச்சைகள் முடிந்த உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குடும்பத்தினர் சொந்த ஊருக்கு செல்ல திரிபுரா செல்ல முடிவு செய்தனர். எனவே இதற்காக சென்னையில் வாடகைக்கு ஒரு அவசர ஊர்தியை வாடகைக்கு எடுத்துள்ளனர். நெடுந்தொலைவு பயணம் என்பதால் அவசர ஊர்தியை களைப்பு இல்லாமல் இயக்க 2 ஓட்டுநர்களுடன் கடந்த 27-ந் தேதி இரவு, திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டம் உதய்பூரில் 3 பேரையும், தெற்கு திரிபுரா மாவட்டம் சாந்திர்பஜாரில் மீதி 2 பேரையும் ஓட்டுநர்கள் இறக்கி விட்டனர். அப்போது வெளிமாநிலங்கள் வழியாக இவர்கள் அனைவரும் வந்திருப்பதால், 5 பயணிகளுக்கும், 2 ஓட்டுநர்களுக்கும் திரிபுரா சுகாதார அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மறுநாள், 2 டிரைவர்களும் தலைநகர் அகர்தலா அருகே ஒரு விடுதியில் தங்கி பின்னர், மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே, அந்த 7 பேரின் கொரோனா பரிசோதனைக்கான அறிக்கை நேற்று முன்தினம் இரவு வெளியானது. அதில், சென்னையைச் சேர்ந்த அவசர ஊர்தி ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு ஓட்டுநருக்கும், திரிபுராவை சேர்ந்த அந்த 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து, திரிபுரா அதிகாரிகள், மேற்கு வங்காள அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அந்த அவசர ஊர்தியின் விவரங்களை கூறி, அந்த வண்டியின் ஓட்டுநரை பிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் அலிபுர்தார் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அந்த அவசர ஊர்தியை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின் அந்த 2 ஓட்டுநர்களையும் சிலிகுரிக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அங்குள்ள முகாமில் தனிமைப்படுத்தப்படுள்ளனர். அதுபோல், திரிபுராவை சேர்ந்த 5 பேரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர் சென்னையிலிருந்து சென்றதால் இவருடன் சென்னையில் தொடர்புடையர்களின் நிலையும் சற்று சிந்திக்க வைத்துள்ளது. எனவே சமுக பொறுப்பை உணர்ந்து அரசு மருத்துவமனைகளை கொரோனா அறிகுறி இருப்பவர்கள் நாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…