இந்தியாவில் கொடிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய பிரதமர் பல்வேறு தரப்பினருடன் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பது குறித்த ஆலோசனையை பாரத பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று (ஏப்ரல்,8)நடத்துகிறார். அப்போது, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் இன்று காலை சரிய்யாக 11 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் உரையாடுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பார்லிமென்ட்டின் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் 5க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தின் போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடவும்,இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பல்வேறு கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்க உள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்தும் இந்த ஆலோசனை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…